ஏனையவை

கனவு

ஜெயா
10, March 2012
Views 901

கண்சிமிட்டி எனை அழைத்து
கண்ணாமூச்சி ஆடுகிறாய்
கைகளினால் கட்டியணைத்தெனை
நெற்றியிலே முட்டுகிறாய்

விரல்களினால் தலைவருடி
வேடிக்கை காட்டுகிறாய்
தூங்காத என்விழிக்காய்
தாலாட்டுப் பாடுகிறாய்

வண்ணத்துப்பூச்சியதாய்
வட்டமிட்டு சிரிக்கின்றாய்
கன்னத்தில் கன்னம் வைத்து
கண் இமையால் வருடுகிறாய்

எனக்குள்ளே புத்துணர்வு
எழுகின்றேன் கண்விழித்து
அத்தனையும் கனவென்று
கரைகின்றேன் கண்ணீரில்....