கவிதைகள் - சீராளன் கவிதைகள்

மது விழியாள்..!

மெல்லக் கண் திறந்திட்டால்
மேகங்கள் மோதும் - விழி
எல்லோர்க்கும் மதுதந்து
இதயத்தைக் கோதும் !

காதல் கவிதை சீராளன் கவிதைகள் 22, June 2017 More

விருத்தப் பா... என் விருப்புப் பா..!

நீரடித் துழுத மண்ணில்
நிறைவள மேகி மீண்டும்
வேரடி முளைத்தல் போலும்
விளமுடன் தேமா காயும்
ஏனையவை சீராளன் கவிதைகள் 03, October 2016 More

காதல் சிதைவுகள்!

காற்றுக் கூடக் காதல் தூதில்
கனத்துப் போகக் கண்டேன் - அதை
ஆற்றுப் படுத்த அலையும் போதில்
அங்கச் சிதைவுகள் கொண்டேன்!

காதல் கவிதை சீராளன் கவிதைகள் 01, September 2016 More

காலமே கவிதை நண்பா!...

வானமே எல்லை கொண்ட
வாலிபக் காதல் வந்தால்
மானமே போயும் நெஞ்சில்
மறந்திட முடியார் வாழ்வில்
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 19, August 2016 More

எனையறியாமல் மனம்பறித்தாய்..!

சிந்தையி லூறிய செந்தமிழே - என்னைச்
சீண்டிடு முன்விழிப் பார்வைக ளே
எந்தப்பி றப்பதன் எச்சங்க ளோ - இன்னும்
என்னுயிர் ஆளுமுன் நாணங்களே !
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 10, May 2016 More

அவள் என் கவிதை மொழி...!

பாடும் கானம் பௌர்ணமி நிலவு
பைந்தமிழ் போற்றும் காவியம் - நீ
ஓடும் நிலவின் ஒளியில் வரைந்த
ஒப்பிலாத் தாரகை ஓவியம்
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 07, February 2016 More

ஓரறிவின்றேல் ஆறறிவில்லை

ஓரறிவைக் கொண்டிருந்தும்
ஒவ்வோர் ஆண்டும்
உதிர்க்கின்ற இலைகொண்டே
உரத்தை ஊன்றும்!
ஏனையவை சீராளன் கவிதைகள் 15, December 2015 More

தகைசான்ற எம்மீழத் தலைவா..!

காலத்தின் சிறையினிலே தமிழர் மாண்பும்
காயங்கள் பலகண்டும் கண்ணீர் இன்றி
ஆலைக்குள் அகப்பட்ட கரும்பைப் போலும்
அன்றாடம் துயர்கொண்ட வாழ்வைப் போக்க
புரட்சி கவிதை சீராளன் கவிதைகள் 26, November 2015 More

ஈழத்தின் பிறப்பு

கருவோடு இனமழித்துச்
சென்றான் - உலகின்
கொல்லாமை கற்பித்த
புத்தனையும் கொன்றான்
புரட்சி கவிதை சீராளன் கவிதைகள் 22, November 2015 More

அழகே தமிழே எனதுயிரே !

தன்னுயிர் போகும் போதும்
தண்டமிழ் பாடும் மாந்தர்
பொன்னுடல் எரியும் போதும்
பூந்தமிழ் வாசம் வீசும்!
ஏனையவை சீராளன் கவிதைகள் 15, November 2015 More